

போபால்,
மத்தியப் பிரதேசத்தில் முதன்முறையாக இந்தூர் மத்தியச் சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தூர் மத்திய சிறையில் தற்போது ஐந்து கைதிகள் மற்றும் இரண்டு ஊழியர்கள் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மத்தியப் பிரதேசத்தில் பங்கரா மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து முதல்முறையாக சிறைச்சாலையில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல்கட்டமாகக் கைதிகள் மற்றும் ஊழியர்கள் என 300 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மத்தியச் சிறையில் பல கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது. இதையடுத்து அவர்களுக்கு சிறைச்சாலையிலேயே தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டன.