மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22 டெங்கு பாதிப்புகள் பதிவு; மொத்த எண்ணிக்கை 225

மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22 டெங்கு பாதிப்புகள் பதிவு; மொத்த எண்ணிக்கை 225
Published on

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில், முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி மருத்துவர் புரே சிங் சேத்தியா கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் 22 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

இதனால், மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 38 நோயாளிகள் குழந்தைகள் ஆவர். அதனால் இந்த விவகாரம் தீவிர கவனத்தில் கொள்ளப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

டெங்கு பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com