மத்திய பிரதேசத்தில் ருசிகரம் மழை வேண்டி ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம்

மத்திய பிரதேச மாநிலத்தில் மழை வேண்டி இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொண்ட சுவாரசிய சம்பவம் நடைபெற்று உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ருசிகரம் மழை வேண்டி ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம்
Published on

போபால்

மழையின்றிப் பஞ்சம் ஏற்படும் காலங்களில் மழை பொழிய வேண்டி நாட்டுப்புற மக்களால் பல்வேறு சடங்குகள் இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெண்கள் நிர்வாண பூசை செய்தல், கழுதைக்குத் திருமணம் செய்து வைத்தல், கொடும்பாவி கட்டி இழுத்தல் , தவளைக்கு திருமணம்.

ஒரு பக்கம் மூடபழக்கவழக்ங்களாக தெர்நிதாலும் மழைச் சடங்குகள் சமூக நன்மை கருதி நாட்டுப்புற மக்களால் கூட்டாக ஒன்றிணைந்து செய்யப்படுபவை என்பது குறிப்பிடத் தக்கதாகும். மழை வேண்டிச் சடங்கு செய்தல் இன்றளவும் வழக்கமாக உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் அமைந்துள்ள முசாகேதி கிராமத்தினர், மழை வேண்டி ஒரு வினோத நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இரு ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால், வருண பகவான் தனது ஆசியை அளிப்பார் என்ற நம்பிக்கையில் வித்தியாசமான திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

முசாகேதி கிராமத்தை சேர்ந்தவர்கள் சாகாராம் மற்றும் ராகேஷ். இருவரையும் திருமண கோலத்தில் அலங்காரம் செய்திருந்தனர். திருமண சடங்குகள் முறையாக செய்யப்பட்டது. திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் ஆடிப்பாடி சந்தோஷமாக கலந்து கொண்டனர்.

அதன்பின்னர், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓதி, இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். இதை தொடர்ந்து, திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. திருமணம் முடிந்த சில மணித்துளிகளில் அப்பகுதியில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. வருண பகவானை வேண்டி, நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தால் மழையும் பெய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் மழை தொடரும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com