

தமிழ்நாடு அரசை பின்பற்றி, ரெயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க, கேரள வனப்ப குதிகளில் ரெயில்வே தண்டவாளங்களில் 'ஏஐ' கேமராக்களை 2 மாதங்களில் பொருத்த வேண்டும் என்று கேரள மாநில அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு-கேரள வனப்பகுதியில் தண்டவாளங்களை கடக்கும் யானைகள், ரெயில் மோதி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக் கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார். ஜி.கே.முத்துகுமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தன. அப்போது கேரள அரசு தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கேரளா வனப்பகுதியில் ரெயில் தண்டவா ளங்களை யானைகள் கடந்து செல்ல ஏதுவாக மூன்று சுரங்க பாதைகள் அமைக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மதுக்கரை - கஞ்சிக்கோடு இடையே தண்டவா ளங்களை ஒட்டி தடுப்பு அமைப்பதற்கு டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, “ரெயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க 'ஏஐ' தொழில்நுட்ப கேமராக்களை தமிழ்நாடு அரசு முதல் முறையாக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளது. தமிழ்நாடு அரசை பின்பற்றி, யானைகள் ரெயில் மோதி பலியாவதை தடுக்க, கேரள வனப்பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் 'ஏஐ' கேமராக்களை கேரள மாநில அரசு இரண்டு மாதங்களில் பொருத்த வேண்டும்.
மேலும் யானைகள் கடந்து செல்ல ஏதுவாக தண்டவாளங்களின் அடியில் சுரங்கப்பாதைகள் அமைக்க கேரள அரசு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும். இந்தப் பணிகளை முடித்தது தொடர்பாக ரெயில்வே துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற 2027-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.