வீட்டை விட்டு வெளியேறிய மதுரை இன்ஸ்டா பிரபலம்: சம்பவத்தை சுட்டிக்காட்டி கேரள போலீசார் விழிப்புணர்வு பதிவு

தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறிய மதுரை இன்ஸ்டா பிரபலம்: சம்பவத்தை சுட்டிக்காட்டி கேரள போலீசார் விழிப்புணர்வு பதிவு
Published on: 

திருவனந்தபுரம்,

மதுரையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வீரமணி. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்வோரிடம் 'ஸ்வீட் பாக்ஸ்' வாங்கி அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்தவர்களுக்கு, தனது வீட்டு முகவரியை வீரமணி பகிர்ந்து இருந்தார். அவர் அனுப்பிய அந்த முகவரியை பார்த்த குறும்புக்கார நெட்டிசன்கள் அவருக்கு பிரபல ஆன்லைன் வர்த்தக தளங்களில் 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் பல பொருட்களை ஆர்டர் செய்து அவரது முகவரிக்கு அனுப்பி உள்ளனர்.

ஒருவர் ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான தொலைக்காட்சியையும், இன்னொருவர் ஒருபடி மேலேபோய் ஜே.சி.பி. எந்திரத்தையும் செய்திருந்தனர். மற்றொருவர் ரூ.70 கோடி மதிப்பிலான ராணுவ பீரங்கி வரை ஆர்டர் செய்துள்ளதாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். ஆரம்பத்தில் நெட்டிசன்களின் ஒவ்வொரு தொந்தரவையும் வீடியோவாக பதிவு செய்து. மேலும் பிரபலமாக முயன்றவருக்கு நிலைமை கைமீறி போனதால், தன்னை வைத்து விளையாடுவதை நிறுத்துமாறு, பின்தொடர்பவர்களிடம் கெஞ்சி வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில், தொடர் கேஷ் ஆன் டெலிவரி தொல்லையால் மதுரை இன்ஸ்டா பிரபலம் வீரமணி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, கேரள போலீசார் விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் தனிப்பட்ட விவரங்கள். புகைப்படங்களைப் பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். கமெண்ட் பாக்ஸ் மற்றும் லைவ் வீடியோக்களில் தனிநபர் குறித்த தகவல்களைப் பகிர்வதும் தனியுரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரித்துள்ளனர். தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com