மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது

மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது
Published on

போபால்,

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,293 ஆக அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 3,986 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றி இருந்து 1,860 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்றுக்கு இன்று 4 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 225 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com