கேரளாவில் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரிந்தது

கேரளாவில் சபரிமலை பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகர ஜோதியை பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
கேரளாவில் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரிந்தது
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலையில் பென்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். இதனையடுத்து அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது.

இந்த பூஜையையொட்டி, கடந்த ஆண்டு வந்த பக்தர்கள் கூட்டத்தை ஒப்பிடும்பொழுது இந்த வருடம் அய்யப்ப பக்தர்கள் சுமார் 18 லட்சம் பேர் சபரிமலைக்கு இன்று வருவார்கள் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, போக்குவரத்தை சீர்படுத்துவது, காணாமல் போகும் நபர்களை மீட்பது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பது, திருட்டு செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, மகர ஜோதி தரிசனம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இன்று திறக்கப்பட்டது. இந்த நிலையில், சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரிந்தது. இதனை அடுத்து சரண கோஷம் எழுப்பியபடி அய்யப்ப பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com