மகாராஷ்டிரா:விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு ஆலையை விற்க எண்ணம்

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மகாராஷ்டிரா அரசு சக்தி ஆலையை விற்பதற்கு எண்ணியுள்ளதாக கூறியுள்ளது.
மகாராஷ்டிரா:விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு ஆலையை விற்க எண்ணம்
Published on

மும்பை

இந்த ஆலையில்தான் 2013 ஆம் ஆண்டில் ஆங்கில பெண் புகைப்பட நிருபர் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னரே இந்த ஆலையின் பரந்த விரிந்த வளாகம் அனைவரின் கவனத்திற்கும் வந்தது. இந்த ஆலை 1980 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. ஆலை அரசிற்கு சொந்தமான நிலத்தில் குத்தகையின் அடிப்படையில் செயல்பட்டு வந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் வருவாய்த்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் அரசு குத்தகையை ரத்து செய்து நிலத்தை பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்நடவடிக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டில் அரசு நீதிமன்றத்தில் அரசிற்கு குத்தகையை ரத்து செய்யும் அதிகாரம் இருப்பதாகவும், குறிப்பாக குத்தகைதாரர் அரசின் சம்மதமின்றி அதை அடமானம் வைத்திருக்கும் நிலையில் அவ்வாறு செய்ய முடியும் என்று வாதிட்டது.

இந்த நிலைத்தை விற்றால் சுமார் ரூ. 38,000 கோடி கிடைக்கும் என்றும் இதைக் கொண்டு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டத் தொகையான ரூ 34,000 கோடியை திரட்ட முடியும் என்றும் கருதுகிறது. அடுத்த சில மாதங்களில் வழக்கறிஞர் குழு ஒன்றின் மூலம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட விற்பனை தடையை நீக்குவதற்கு அரசு முயற்சிக்கும் என்று கூறியுள்ள வருவாய்த் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், இதற்கு மூளையை பயன்படுத்தும் தேவை மட்டுமேயுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com