மகா கும்பமேளா: பக்தர்களின் வசதிக்காக 40 மின்சார பேருந்துகள் அறிமுகம்

மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 40 புதிய மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மகா கும்பமேளா: பக்தர்களின் வசதிக்காக 40 மின்சார பேருந்துகள் அறிமுகம்
Published on

லக்னோ,

உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக 'மகா கும்பமேளா' விளங்குகிறது. இந்நிலையில், 'மகா கும்பமேளா 2025' வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிரயாக்ராஜ் நகருக்கு சாலை, ரெயில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் வந்து சேர்வதற்கான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் தேவைக்காக 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. சுமார் 1.6 லட்சம் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 40 புதிய மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மகா கும்பமேளாவிற்கு முன்பு 10 முதல் 15 பேருந்துகளின் இயக்கம் தொடங்கும் என்றும், மகா கும்பமேளாவின் முக்கிய நிகழ்வான மவுனி அமாவாசைக்கு முன்பு 40 பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com