எண்ணற்ற மக்களை ஒன்றிணைக்கும் 'மகா கும்பமேளா' - பிரதமர் மோடி வாழ்த்து

மகா கும்பமேளா, இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
எண்ணற்ற மக்களை ஒன்றிணைக்கும் 'மகா கும்பமேளா' - பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.இந்த விழாவில் கலந்து கொண்டு புனித நீராட உலகில் பல இடங்களில் இருந்தும் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், மகா கும்பமேளாவையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது;

"பாரதத்தின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளான மகா கும்பமேளா பிரயாக்ராஜில் தொடங்கியுள்ளது. இது நம்பிக்கை, பக்தி மற்றும் கலாசாரத்தின் புனித சங்கமத்தில் எண்ணற்ற மக்களை ஒன்றிணைக்கிறது. மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியது. நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது. பிரயாக்ராஜ் கோலாகலமாக இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். எண்ணற்ற மக்கள் அங்கு வந்து புனித நீராடி ஆசி பெறுகிறார்கள். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாழ்த்துகள்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com