மகா கும்பமேளா: யாத்ரீகர்கள் சென்ற வேன் விபத்து... 4 பேர் பலி

யாத்ரீகர்கள் சென்ற வேன் சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
காந்திநகர்,
உத்தரபிரதேசம் பருச் மாவட்டத்தை சேர்ந்த 10 யாத்ரீகர்கள் பிரயாக்ராஜில் உள்ள கும்பமேளாவிற்கு சென்று நீராடினர். இந்நிலையில் கும்பமேளாவில் இருந்து வேனில் திரும்பிய யாத்ரீகர்கள் குஜராத்தின் லிம்கேடா அருகே இந்தூர்-அகமதாபாத் நெடுஞ்சாலையில் அதிகாலை 2.15 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கு சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் வேனில் இருந்த 4 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் இறந்தவர்கள் அங்கலேஷ்வரைச் சேர்ந்த தேவ்ராஜ் நாகும் (49) அவரது மனைவி ஜசுபா (47) , தோல்காவைச் சேர்ந்த சித்ராஜ் தாபி (32) மற்றும் ரமேஷ் கோஸ்வாமி (47) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.






