கும்ப மேளாவில் 3 முறை மனைவியை தொலைத்தவர்


கும்ப மேளாவில் 3 முறை மனைவியை தொலைத்தவர்
x
தினத்தந்தி 1 Feb 2025 3:00 AM IST (Updated: 1 Feb 2025 3:00 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை தவறவிட்டபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் அரை மணி நேரத்திற்குள் போலீசார் அழைத்து வந்து என்னிடம் விட்டுவிடுவார்கள் என்று அந்த முதியவர் கூறினார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கானவர்கள் புனிதநீராடி வருகிறார்கள். கூட்ட நெரிசலில் பலரும் குடும்பத்தினரை பிரிந்து பின்னர் சேர்ந்த அனுபவம் இருக்கும். அப்படி ஒரு முதியவர் மனைவியை 3 முறை தொலைத்துவிட்டு பின்னர் சேர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து அந்த முதியவர் நகைச்சுவையாக வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "முன்பெல்லாம் புனித நீராடலுக்கு சென்று யாராவது தொலைந்து போனால், பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் கண்டுபிடிப்பார்கள். ஆனால் நான் மனைவியை 3 முறை தொலைத்துவிட்டேன். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவளை அரை மணி நேரத்திற்குள் போலீசார் அழைத்து வந்துவிட்டனர். ஒவ்வொரு முறையும், நான் எப்படியோ தப்பித்துவிடுவேன் என்று நினைத்தேன்" என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். வீடியோவை சுமார் 4 லட்சம் பேர் ரசித்து உள்ளனர்.

1 More update

Next Story