மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 29 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்

மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 29 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தை அமாவாசையையொட்டி கடந்த 29ம் தேதி அதிகாலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட 7 கோடியே 64 லட்சம் பேர் திரண்டனர். சிலர் தடுப்புகளை தாண்டி குதித்து சென்றதால் ஏற்பட்ட தள்ளு முள்ளு மற்றும் நெரிசல் காரணமாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 4 பேர், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 30 பக்தர்கள் பலியானார்கள். மேலும் 60 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 36 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com