

கொல்கத்தா,
இந்த ஆண்டுக்கான புரட்டாசி மகாளய அமாவாசை நேற்று நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்கள் கடலில் பக்தர்கள் புனித நீராடவும், திதி, தர்ப்பண பூஜை செய்யவும் அனுமத்கிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஹவுரா பாலம் அருகே ஹூக்ளி நதிக்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நெருக்கியடித்தப்படி நின்றனர். இதனால் கொரோனா பரவும் அச்சம் ஏற்ப்பட்டுள்ளது.