மராட்டியம்: மந்திராலயாவுக்கு மிரட்டல் விடுத்த 61 வயது நபர் கைது

மந்திராலயாவுக்கு பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்த 61 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
image courtesy; PTI
image courtesy; PTI
Published on

மும்பை,

மராட்டியத்தின் மும்பையில் உள்ள மந்திராலய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 10 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொலைபேசியில் பேசிய மர்மநபர், இன்னும் 1 அல்லது 2 நாட்களில் மந்திராலயாவில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும் என மிரட்டல் விடுத்து அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும் மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடினர். அவரது தொலைபேசி நம்பரை வைத்து தேடியதில் மிரட்டல் விடுத்த நபர் பிரகாஷ் கிஷன்சந்த் கெமானி (வயது 61) என அடையாளம் காணப்பட்டார். அவரை கண்டிவலி போலீசார் கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி பின் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com