மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்ட செயல்பாடுகளில் மராட்டியம் முதலிடம் - நிதி ஆயோக் தகவல்

மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்ட செயல்பாடுகளில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்காக மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு 'போஷான் அபியான்' என்ற பெயரில் மாபெரும் திட்டத்தை தொடங்கியது.

இந்த திட்டத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்தும் விதம் குறித்து நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை அளித்து உள்ளது.

அதன்படி இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் பெரிய மாநிலங்களில் மராட்டியம் முதலிடத்தை பிடித்து உள்ளது. ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 19 பெரிய மாநிலங்களில் 12-ல் 70 சதவீதத்துக்கும் அதிகான பணிகள் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

சிறிய மாநிலங்களை பொறுத்தவரை சிக்கிம் முதலிடத்தில் உள்ளது.

17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே 12 முதல் 23 மாத வயதுடைய குழந்தைகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக நோய்த்தடுப்பு மருந்து பெற்றுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளே முழு நோய்த்தடுப்பு பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com