மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 16 பேர் கைது

மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 16 பேர் கைது
Published on

மும்பை,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர் மற்றும் அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

நவி மும்பை, தானே, சோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் 2 ஆண்டுகளுக்கு மேலாக மராட்டியத்தில் வசித்து வந்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட வங்காளதேசத்தினர் போலி ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 16 பேரில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com