பிரதமர் மோடியுடன் மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நாளை சந்திப்பு

பிரதமர் மோடியை மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நாளை சந்தித்துப் பேசுகிறார்.
பிரதமர் மோடியுடன் மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நாளை சந்திப்பு
Published on

மும்பை,

பிரதமர் மோடியை மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நாளை சந்திக்க உள்ளார். டெல்லியில் நடைபெறும் இந்த சந்திப்பின் போது மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்துவார் எனத்தகவல்கள் கூறுகின்றன. மராட்டியத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் சூழலில் இது குறித்தும் இருவரும் ஆலோசிக்கலாம் எனத்தெரிகிறது.

முன்னதாக, மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தீர்ப்பளித்தது. இதையடுத்து, மராத்தா சமூகத்தினரை சமூக மற்றும் கல்வி ரீதியில் பின் தங்கிய வகுப்பினராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கடிதம் மூலமாக வலியுறுத்தி இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com