மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி மருத்துவமனையில் அனுமதி

மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ரேஷ்மி தாக்கரே கடந்த 23 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி மருத்துவமனையில் அனுமதி
Published on

மும்பை,

மராட்டிய முதல்வரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேவின் மனைவி ரேஷ்மி தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோர்வாக உணர்ந்ததால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரேஷ்மி தாக்கரே அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 23- ஆம் தேதி ரேஷ்மி தாக்கரே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது முதல் வீட்டுத்தனிமையில் இருந்த ரேஷ்மி தாக்கரே, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரேவும் ரேஷ்மி தாக்கரேவும் கடந்த மார்ச் 11 ஆம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டனர். ரேஷ்மி தாக்கரே, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com