மராட்டியத்தில் புதிதாக 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் புதிதாக இன்று மேலும் 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் புதிதாக 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் இன்று மாநிலத்தில் புதிதாக 6,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 60 ஆயிரத்து 766 ஆக அதிகரித்து உள்ளது.

இதில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 926 பேர் குணமடைந்து உள்ளனர். இன்று மட்டும் 8 ஆயிரத்து 430 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 746 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 91 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் இதுவரை தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 554 ஆக உயர்ந்து உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com