மராட்டியத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் மீது தீ வைப்பு, பெண் உயிரிழப்பு

மராட்டியத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் மீது தீ வைக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
மராட்டியத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் மீது தீ வைப்பு, பெண் உயிரிழப்பு
Published on

மராட்டிய மாநிலம் அகமத்நகரைச் சேர்ந்த முகேஷ் ரான்சிங் (வயது 23) என்ற இளைஞர் ருக்மணி (வயது 19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பெண்ணின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இருப்பினும் பெண்ணின் தாயார் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டார். இதனையடுத்து விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பெண்ணின் குடும்பத்தார் மிரட்டியுள்ளனர். இருப்பினும் முகேசும், ருக்மணியும் சேர்ந்து வாழ்ந்தனர்.

கடந்த மே ஒன்றாம் தேதி இருவருக்கும் இடையே சிறிய சண்டை ஏற்பட்டுள்ளது. கோபம் கொண்டு ருக்மணி அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் சமாதானமடைந்து ருக்மணி கணவன் வீட்டிற்கு சென்றுவிட முயற்சி செய்துள்ளார். ஆனால் தந்தையின் குடும்பத்தார் அனுமதிக்கவில்லை. உடனடியாக கணவரை அழைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். முகேசும் அங்கு சென்றுள்ளார். அப்போது இருதரப்பு இடையேயும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பெண்ணின் தந்தை ராமா பார்தி மற்றும் மைத்துனர்கள் சுரேந்திரா, கான்சாம் சரோஜ் தம்பதியினரை ஒருவீட்டிற்குள் வைத்து அடைத்துள்ளனர். அங்கு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். அப்போது அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர்.

தீ காயங்களோடு மீட்கப்பட்ட இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 70 சதவிதம் காயம் அடைந்த ருக்மணி மருத்துவமனையில் உயிரிழந்தார். 50 சதவித தீக்காயங்களுடன் முகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை கைது செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com