மராட்டியம்: ரூ.2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி

கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல் -மந்திரி பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மராட்டியம்: ரூ.2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி
Published on

மும்பை,

கடந்த ஆண்டு( 2025) மராட்டிய சட்டசபை தேர்தலில் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மராட்டியத்தின் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

இந்தநிலையில், மராட்டியத்தில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

* விவசாயிகள் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 'புண்யஸ்லோக் அகில்யாதேவி ஹோல்கர்

விவசாயி கடன் நிவாரணத் திட்டம்' என்ற புதிய திட்டத்திற்கு மாநில மைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

* இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ₹2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

* விவசாயிகளுக்குச் சொந்தமாக எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என்ற எவ்வித நில வரம்பு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.

* இத்திட்டம் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com