மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல்


மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல்
x

ஏக்நாத் ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய துணை முதல்-மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் வந்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோரேகான், ஜே ஜே மார்க் காவல் நிலையங்களுக்கும், மாநில அரசின் தலைமையகமான மந்திராலயாவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் இ-மெயில் மூலம் வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த அழைப்பை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story