மராட்டியம்: சொகுசு கார் மோதி முதியவர் பலி

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்
மராட்டியம்: சொகுசு கார் மோதி முதியவர் பலி
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் அஸ்வதி சவுக் பகுதியை சேர்ந்த முதியவர் கைலாஷ் சோடியா (வயது 68). இவர் இன்று காலை ஜப்பனீஸ் கார்டன் பகுதியில் உள்ள சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

விபத்து - முதியவர் பலி

அப்போது அங்கு வேகமாக வந்த சொகுசு கார் கைலாஷ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் கைலாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று கைலாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com