மகாராஷ்டிரா: 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை -கால்பந்து பயிற்சியாளர் கைது

கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பிளாக்மெயில் செய்து மிரட்டியுள்ளார்.
17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த கால்பந்து பயிற்சியாளர் கைது
Published on

ோக்மும்பை,

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் பகுதியில் தனியார் கால்பந்து பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தை 37 வயதுடைய நபர் ஒருவர் நடத்தி வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டில் 17 வயது சிறுமி இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து கால்பந்து பயிற்சி பெற்று வந்தார். அப்போது பயிற்சியாளர் அந்த சிறுமியிடம் கால்பந்து விளையாட்டில் “பிரகாசமான வாய்ப்புகள்” இருப்பதாக உறுதியளித்தார். மேலும் அந்த சிறுமியின் நம்பிக்கையைப் பெற்ற அவர், தனது ஆசைக்கு இணங்கச் செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பின்னர் பயிற்சியாளர் அவரை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த சிறுமி பயிற்சியாளருடனான தொடர்பை துண்டிக்கத் தொடங்கினார். இதனைத்தொடர்ந்து கோபமடைந்த பயிற்சியாளர் சிறுமியை தனது வழிக்கு கொண்டு வருவதற்காக அந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் பொதுவெளியில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

பயிற்சியாளர் கைது

தொடர்ச்சியான துன்புறுத்தலால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, தனது குடும்பத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்தார். எனவே அதிச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மணிக்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் மணிக்பூர் காவல் துறையினர் கடந்த சனிக்கிழமை அன்று பயிற்சியாளரை கைது செய்தனர்.

பிறகு, பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவின் கீழ் கற்பழிப்பு மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டப்பிரிவிலும் கால்பந்து பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து பயிற்சியாளரிடம் மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com