

மும்பை,
மராட்டியத்தில் மேம்பாலத்தில் இருந்து சொகுசு கார் கீழே விழுந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மராட்டிய மாநிலம் மும்பையின் மெரினா டிரைவ் பகுதியில் இருந்து ஹஜி அலி நகர் நோக்கி இன்று அதிகாலை 5 மணியளவில் சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த சொகுசு காரில் 4 இளைஞர்கள் பயணம் செய்தனர்.
இந்நிலையில், மெரினா டிரைவ் பகுதியில் இருந்து கடற்கரை சாலை பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த சனாய் கஜல் (வயது 21) என்ற இளைஞர் உள்பட 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
எஞ்சிய ஒரு இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கார் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.