

மும்பை,
மராட்டியத்தில் 6 வயது சிறுமியை முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்த முதியவர் தினேஷ் சுவர்னகர் (வயது 60). இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் தம்பதியின் 6 வயது பெண் குழந்தைக்கு சாக்லேட் தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, சிறுமியை நேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், வீட்டில் வைத்து சிறுமியை தினேஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் தினேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்,இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.