மராட்டியம்: தானேயில் உள்ள ஹைபர்சிட்டி மாலில் பயங்கர தீ விபத்து

மாலில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அணைத்து தீயில் கருகி சேதமாகின.
தானே,
மராட்டிய மாநிலம் தானே மேற்கு கோட்பந்தர் சாலையின் கசர்வடவலியில் உள்ள ஹைப்பர் சிட்டி மாலில் இன்று காலை 7:56 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஹைபர்சிட்டி மாலில் உள்ள பூமா ஷோரூமில் தீ வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் மாலில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அணைத்து தீயில் கருகி சேதமாகின.
இந்த நிலையில் விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஏறக்குறைய 3 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த அவர்கள் பலத்த போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.
இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி நிலேஷ் வெடல், கூறுகையில்;
"ஹைப்ரசிட்டி மாலில் உள்ள முதல் தளத்தின் பூமா ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது. தீ அணைக்கப்பட்டுள்ளது. தீவிபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை" என்று அதிகாரி கூறினார்.
Related Tags :
Next Story






