சட்டசபை நடந்து கொண்டிருக்கும்போது செல்போனில் மந்திரி செய்த அதிர்ச்சி செயல்

மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் இருந்து வருகிறார்.
மும்பை,
மராட்டியத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் ( அஜித் பவார் ) பிரிவு ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா கட்சி இரண்டாக பிளவுப்பட்டு ஷிண்டே அணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வைக்கிறது. உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவிய சரத் பவார் அணியானது எதிர்க்கட்சி வரிசையிலும், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அஜித் பவார் அணி ஆளுங்கட்சியிலும் அங்கம் வகிக்கின்றன. இதில் அஜித் பவார் துணை மந்திரியாக ஆக பதவி வகித்து வருகிறார். அஜித் பவார் அணியை சேர்ந்த மாணிக் ராவ் கோகடே மராட்டிய வேளாண் துறை மந்திரியாக பொறுப்பு வகிக்கிறார்.
இந்தநிலையில் சட்டசபை நடந்துகொண்டிருக்கும்போது மாணிக் ராவ் கோகடே தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சர்வ சாதாரணமாக செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார். சட்டப்சபையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது போது ரம்மி விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், அவர் பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே எம்.பி. வலியுறுத்தியுள்ளார் மேலும் மந்திரி மாணிக்ராவ் கோகடேவை உடனடியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் பிரிவு) மூத்த தலைவர் ரோஹித் பவார் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மாணிக்ராவ் கோகடே சட்டப் பேரவையில் ரம்மி விளையாடிய வீடியோவையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்.






