மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : இன்று மேலும் 20,131 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 20,131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : இன்று மேலும் 20,131 பேருக்கு தொற்று உறுதி
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மராட்டியம் தான் உள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் மேலும் 20,131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,43,772 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 380 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,407 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 13,234 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 6,72,556 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2,43,446 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com