மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,297 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,297 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 52 ஆயிரத்து 905 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 6,107 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 70 ஆயிரத்து 053 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் 25 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 51,415 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பாதிப்புடன் 30,265 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com