மராட்டியத்தில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் இன்று 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
Published on

மும்பை,

மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி இருந்தது. இந்தநிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று முன்தினம் பாதிப்பு 5 ஆயிரத்து 210 ஆக குறைந்தது. ஆனால், நேற்று 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவானது.

இந்த நிலையில், மராட்டியத்தில் இன்று 8,807- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,772- ஆகும். கொரோனா பாதிப்பால் இன்று 80- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 21 ஆயிரத்து 119- ஆக உள்ளது.

தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 08- ஆயிரத்து 623- ஆகும். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 59,358 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51,937- ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com