மராட்டியத்தில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு!

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65,89,982 ஆக உயர்ந்துள்ளது. கொரொனா தொற்று பாதிப்பில் இருந்து 1,682 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 64,16,998 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி கொரோனா மீட்பு விகிதம் 97.38 சதவிகிதமாக உள்ளது.

மராட்டியத்தில் ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு 26 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,39,760 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி உயிரிழப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது.

மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 29,627 ஆக உள்ளது. மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று 319 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com