மராட்டியத்தில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
மராட்டியத்தில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா மீண்டும் தலைவிரித்தாட தொடங்கி உள்ளது. நேற்று 2,946 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை அதிரடியாக 1,885 ஆக குறைந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 24,436 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,885 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.மாநில தலைநகர் மும்பையில் மட்டும் 1,703 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதனை தொடர்ந்து, புனே (110), நாக்பூர் (31), நாசிக் (24), லத்தூர் (7), அகோலா (5), கோலாப்பூர் (3), மற்றும் அவுரங்காபாத் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு சற்று குறைந்த போதிலும், இன்று மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் 774 பேர் குணமடைந்தனர்.இதனால் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,000-ஐ நெருங்கி விட்டது. அதாவது 17,480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மொத்தம் 1,47,871 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனை ஆய்வகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, பிஏ.4 வகை கொரோனா தொற்று பாதித்த 3 நோயாளிகளும், பிஏ.5 வகையைச் சேர்ந்த ஒரு நோயாளியும் மும்பையில் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தர்போது குணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com