மராட்டியத்தில் இன்று மேலும் 3,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 3,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் இன்று மேலும் 3,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் இன்று மேலும் 3,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,35,636 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 59 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 49,580 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4,279 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 18,32,825 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 52,084 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com