

மும்பை,
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,094 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 66,20,423 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,40,447 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,976 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 64,63,932 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12,410 ஆக உள்ளது.