மராட்டியத்தில் வேகமெடுக்கும் கொரோனா: புதிதாக 25,833 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று புதிதாக 25,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,96,340 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா பாதிப்பால் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,138 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 12,764 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் தற்போது 1,66,353 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 21,75,565 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com