மராட்டியத்தில் புதிதாக 3,145 பேருக்கு கொரோனா

மராட்டிய மாநிலத்தில் புதிதாக 3,145- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் புதிதாக 3,145 பேருக்கு கொரோனா
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,145- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் புதிதாக 3,145- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19,84,768 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 45 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 18,81,088 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் 50,336 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்புடன் மராட்டியத்தில் 52,152 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com