மராட்டியம்: 2 மாதங்களில் 479 விவசாயிகள் தற்கொலை

நிவாரணத்தொகையை அதிகரிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டியம்: 2 மாதங்களில் 479 விவசாயிகள் தற்கொலை
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் பயிர்கள் சேதம், கடன்களை அடைக்க முடியாத சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிவாரணம் தொடர்பாக மாநில சட்டசபையில் உறுப்பினர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு மராட்டிய நிவாரணம், மறுவாழ்வுத்துறை மந்திரி மார்க்ரண்ட் பாட்டீல் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.

அதில், மராட்டியத்தில் மார்ச், ஏப்ரல் ஆகிய 2 மாதங்களில் 479 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதில், 164 பேர் நிவாரணத்தொகை பெற தகுதி உள்ளவர்கள் என்றும், மேலும் 153 பேர் நிவாரணத்தொகைக்கு தகுதி ஆனவர்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், எஞ்சியோர் நிவாரணம் பெற தகுதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிவாரணத்தொகையை அதிகரிக்க எந்தவித திட்டமும் தற்போது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com