மராட்டிய மாநிலம் அகோலாவில் 2 குழுக்கள் இடையே மோதல் - 144 தடை உத்தரவு

மராட்டிய மாநிலம் அகோலாவில் நேற்று மாலை இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.
மராட்டிய மாநிலம் அகோலாவில் 2 குழுக்கள் இடையே மோதல் - 144 தடை உத்தரவு
Published on

அகோலா,

மராட்டிய மாநிலம் அகோலாவில் உள்ள பழைய நகர காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித்தாக்கினர். மேலும் அந்த கும்பல் சில வாகனங்களையும் சேதப்படுத்தியது.

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தங்கள் பலத்தை பயன்படுத்தினர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில் வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அகோலாவில் சில நாட்களுக்கு முன்பு சங்கர் நகர் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com