சர்வதேச விருது பெற்ற மராட்டிய ஆசிரியர் உலக வங்கியின் கமிட்டியில் இடம்பிடித்தார்

சர்வதேச விருது பெற்ற மராட்டியத்தை சேர்ந்த ஆசிரியர் ரஞ்சித்சிங் திசாலே உலகவங்கியின் கமிட்டியில் இடம்பிடித்து உள்ளார்.
சர்வதேச விருது பெற்ற மராட்டிய ஆசிரியர் உலக வங்கியின் கமிட்டியில் இடம்பிடித்தார்
Published on

ஆலோசனை கமிட்டி

அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்த பெண் கல்விக்காக சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதற்காக சோலாப்பூரை சேர்ந்த ஆசிரியர் ரஞ்சித்சிங் திசாலேவுக்கு கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. மேலும் இதற்காக அவருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டது. இந்தநிலையில் கல்வியின் தரத்தை மேம்படுத்த உலக வங்கி சர்வதேச அளவில் ஆலோசனை கமிட்டியை அமைத்து உள்ளது. இந்த கமிட்டியில் ஆசிரியர் ரஞ்சித்சிங் திசாலே இடம்பிடித்து உள்ளார்.

உலக வங்கி சமீபத்தில் சர்வதேச பயிற்சி வகுப்புகள், சர்வதேச தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தை அமைத்ததாக ஆசிரியர் ரஞ்சித்சிங் திசாலே கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், " உலக வங்கியால் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் ஆலோசகராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். " என்றார்.

இந்த தகவலை உலக வங்கியின் செய்தி தொடர்பாளரும் உறுதிப்படுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com