மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போடாமல், சான்றிதழ் வந்ததால் வாலிபர் அதிர்ச்சி

2-வது டோஸ் தடுப்பூசி போடும் முன்பே, வாலிபருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.அதில் இருந்த லிங்கை கிளிக் செய்த போது, வாலிபர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது.
மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போடாமல், சான்றிதழ் வந்ததால் வாலிபர் அதிர்ச்சி
Published on

மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் அவ்சா தாலுகா ஜவல்கா கிராமத்தை சேர்ந்தவர் விஜய்குமார் (வயது29). இவர் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டு இருந்தார்.

இந்தநிலையில் 2-வது டோஸ் தடுப்பூசி போடும் முன்பே, கடந்த புதன்கிழமை மாலை 4.17 மணியளவில் வாலிபருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.

மேலும் அதில் இருந்த லிங்கை கிளிக் செய்த போது, வாலிபர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது. இதை பார்த்து வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் தடுப்பூசி மையத்தை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது அங்கு இருந்தவர்கள் கடந்த புதன்கிழமை அங்கு தடுப்பூசி முகாம் நடக்கவே இல்லை என கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவ்சா மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அன்காத் ஜாதவிடம் கேட்ட போது, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் செல்போன் எண்ணை தவறாக பதிவு செய்ததால் இந்த தவறு நடந்து இருக்கலாம், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com