பெரும்பான்மை கிடைக்கவில்லை.. டி.வி.யை தூக்கி போட்டு உடைத்து பாஜக தொண்டர் ஆவேசம்

பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் அக்கட்சி தொண்டர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.
பெரும்பான்மை கிடைக்கவில்லை.. டி.வி.யை தூக்கி போட்டு உடைத்து பாஜக தொண்டர் ஆவேசம்
Published on

அமராவதி,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அனைத்து தொகுதிகளிலும் கிட்டத்தட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளையும், 'இந்தியா' கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியானது. ஆனால், அது தவறாகி போயுள்ளது. ஆளும் பா.ஜ.க., 240 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மைக்கான 272 என்ற இடங்களை பெற்று தனிக்கட்சியாக பெற முடியாமல் போனது. இதனால் பாஜக தொண்டர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், பாஜக 300 தொகுதிகளுக்கு கீழ் முன்னிலையை இழந்தததை ஏற்க முடியாமல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர், பார்த்து கொண்டிருந்த டிவியை தூக்கி போட்டு உடைத்துள்ளார். இதனை சக பாஜக தொண்டர்கள் தடுக்க முயன்ற போதும், அவர் உடைப்பதை நிறுத்தவில்லை. இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com