

திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான இந்திய கம்யூனிஸ்டு வாக்குகளை அறுவடை செய்ய புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து பிரசாரம் செய்யும் வகையில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பிரசார குழுக்களை அக்கட்சி அமைத்துள்ளது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் சுமார் 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தினரை சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.