3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்; டெல்லி சுகாதாரத்துறை மந்திரி

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறோம் என டெல்லி சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்; டெல்லி சுகாதாரத்துறை மந்திரி
Published on

புதுடெல்லி,

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முழுமையாக தயாரகி வருகிறோம் என்று டெல்லி சுகதாரத்துறை சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறியதாவது;-

பெருந்தொற்று காலத்தில் உயிர் தியாகம் செய்த மருத்துவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அத்தகைய மருத்துவர்களின் பெயர்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கபடும். கொரோனாவுக்கு எதிராக மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com