அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காண இந்தியா விரைந்து உதவ வேண்டும்: மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத்

மாலத்தீவு அரசியல் குழப்பத்திற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இந்தியா தீர்வு காண வேண்டும் என முன்னாள் அதிபர் நஷீத் வலியுறுத்தியுள்ளார். #Maldives
அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காண இந்தியா விரைந்து உதவ வேண்டும்: மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத்
Published on

கொழும்பு,

மாலத்தீவில் அதிபராக அப்துல்லா யாமீன் உள்ளார். அவருடைய அரசுக்கு எதிராக ஆளும் கட்சியை சேர்ந்த 12 எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். மேலும் அவர்கள் எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து ஆட்சி கவிழும் அபாயத்தை தவிர்க்க 12 எம்.பி.க்களை அப்துல்லா யாமீன் தகுதி நீக்கம் செய்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிருப்தியாளர்கள், எதிர்க்கட்சியினரை கைது செய்ய உத்தரவிட்டார். இதனிடையே 12 எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுத்த அப்துல்லா யாமீன் மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடன உத்தரவை பிறப்பித்தார். இதனை அவருடைய அரசியல் ஆலோசகர் அஜிமா சுக்கூர் நேற்று அறிவித்தார். இதனால் அங்கு தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், 12 எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலி ஹமீத் மற்றும் மேலும் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி என இரு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயாமும் கைது செய்யப்பட்டுள்ளார். அதிபர் உத்தரவின் பேரில் இந்த கைது நடவடிக்கைகள் துவங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மாலத்தீவில் அவசர நிலை பிரகடனத்தையடுத்து, உச்ச கட்ட அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாலத்தீவு அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண இந்தியா உதவவேண்டும் என்று இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா விரைந்து செயல்பட்டு மாலத்தீவில் தற்போது உள்ள அரசியல் நெருக்கடியான நிலையை தீர்க்க உதவ வேண்டும் என்று முகம்மது நஷீத் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உடனடியாக அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முகம்மது நஷீத் அதிபர் யாமீனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலத்தீவில், முதல் முறையாக ஜனநாயக ரீதியில் ஆட்சியை பிடித்த அதிபர் என்ற பெருமையை பெற்ற முகம்மது நஷீத், கடந்த 2013 ஆம் ஆண்டு பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். முகம்மது நஷீத்துக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன், நேர்மையான விசாரணை நடைபெறவில்லை என கூறி முன்னாள் ஜனாதிபதி முகம்மது நஷீத் உட்பட சில அரசியல் தலைவர்களை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com