அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களின் ஊதிய உயர்வு - மம்தா பானர்ஜி அறிவிப்பு

இன்று காலை 10 மணிக்கு பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நேற்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களின் ஊதிய உயர்வு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
Published on

கொல்கத்தா,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று காலை 10 மணிக்கு பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை அறிவிப்பதாக நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் தெரிவித்தார். மேலும் அந்த அறிவிப்புகளுக்கு தனது பேஸ்புக் பக்கத்தை அனைவரும் பின்தொடருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " ஏப்ரல் 2024 முதல், ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.750 ஊதிய உயர்வு வழங்கப்படும். மேலும், எங்களது அங்கன்வாடி உதவியாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.500 உயர்த்த முடிவு செய்துள்ளோம். எங்கள் மீது நிதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம்."

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com