மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார்.
image courtesy: ANI
image courtesy: ANI
Published on

புதுடெல்லி,

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்ட மாநிலம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் மம்தா பானர்ஜி விவாதிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்திக்க உள்ளார். மேலும் நாளை மறுநாள் பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மம்தா பானர்ஜியின் சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com