சிபிஐ அதிகாரிகள் தடுக்கப்பட்டதை அடுத்து பரபரப்பு; போலீஸ் கமிஷ்னர் வீட்டில் மம்தா திடீர் ஆலோசனை

கொல்கத்தா போலீஸ் கமிஷ்னர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரிகள் தடுக்கப்பட்டதை அடுத்து பரபரப்பு; போலீஸ் கமிஷ்னர் வீட்டில் மம்தா திடீர் ஆலோசனை
Published on

கொல்கத்தா,

சாரதா நிதி நிறுவன முறைகேடு விவகாரத்தில் கொல்கத்தா போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டு உள்ளதாகவும், அவரை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகியது. ஆனால் இதனை அம்மாநில போலீஸ் மறுத்தது. மீடியாக்களில் வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றது. பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கொல்கத்தா போலீஸ் அதிகாரி ஜாவித் சாமிம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சாரதா நிதி முறைகேடு தெடர்பாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் போலீஸ் கமிஷ்னரின் வீட்டிற்குள் சிபிஐ அதிகாரிகள் செல்வதை அம்மாநில போலீஸ் தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதற்கிடையே கமிஷ்னர் வீட்டிற்கு வந்த மம்தா பானர்ஜி அதிகாரிகளுடன் ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். அங்கு கொல்கத்தா மேயரும் வந்துள்ளார். போலீஸ் கமிஷ்னர் வீட்டிற்கு வெளியே மேற்கு வங்காள சிறப்புப்படை போலீஸ் காவலில் உள்ளது.

குற்றச்சாட்டு என்ன?

ரோஸ் வேலி மற்றும் சாரதா நிதி நிறுவனங்கள் மீதான மோசடி வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரியாக செயல்பட்டவர் ராஜீவ் குமார். வழக்கு விசாரணையில் முக்கியமான ஆவணங்கள் மாயமானதை அடுத்து விசாரணைக்கு உதவுமாறு சிபிஐ தரப்பில் கோரப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு வருடங்களாக சம்மன் விடுத்தும் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com