முதல் நாள் அமித்ஷாவுக்கு விருந்து; மறுநாளில் மம்தாவுடனான நெருக்கம் பற்றி பேச்சு; அரசியல் அரங்கை அதிர வைத்த கங்குலி

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு நேற்று முன்தினம் விருந்து அளித்த சவுரவ் கங்குலி, நேற்று மாநில முதல் -மந்திரி மம்தாவுடனான தனது நருக்கம்பற்றி பசி அரசியல் அரங்கை அதிர வைத்தார்.
முதல் நாள் அமித்ஷாவுக்கு விருந்து; மறுநாளில் மம்தாவுடனான நெருக்கம் பற்றி பேச்சு; அரசியல் அரங்கை அதிர வைத்த கங்குலி
Published on

கொல்கத்தா,

அமித்ஷாவுக்கு விருந்து

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க.வின் அரசியல் எதிரியான மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கு கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி, நேற்று முன்தினம் அறுசுவை உணவு வகைகளுடன் விருந்து அளித்தார்.

இந்த விருந்தில் அமித்ஷாவுடன் பா.ஜ.க. தலைவர்கள் சுவபன் தாஸ்குப்தா, சுகந்தா மஜூம்தார், சுவேந்து அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

திரும்பிப்பார்த்த அரசியல் அரங்கம்

இதைக் கண்ட அரசியல் அரங்கம் அவரை திரும்பிப்பார்த்தது. அத்துடனேகூட, கங்குலி, பா.ஜ.க. பக்கம் சாய்கிறாரோ என்ற ஊகத்துக்கும் வழிநடத்தியது.

ஆனால் அவரோ, பல ஊகங்கள் எழுந்துள்ளன. நான் அவரை (அமித்ஷா) 2008 முதல் அறிவேன். கிரிக்கெட் விளையாடியபோது அடிக்கடி சந்தித்துள்ளேன். நான் அவரது மகனுடன் ( இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா) இணைந்து பணியாற்றுகிறேன். அதற்கு மேல் எதுவும் இல்லை என்று முடித்துக்கொண்டார்.

மம்தாவுடன் நெருக்கம்

இந்த நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த தனியார் ஆஸ்பத்திரி திறப்பு விழாவில் கலந்து கொண்ட கங்குலி, தனக்கும் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையேயான நருக்கம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எனக்கும் மிகவும் நெருக்கமானவர். இந்த ஆஸ்பத்திரியை தொடங்க விரும்பிய டாக்டரை அழைத்துச்சென்று உதவுமாறு நான் அவரை நாடினேன். அவர் உடனே உதவி செய்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல் நாளில் அமித்ஷாவுக்கு விருந்து அளித்து விட்டு மறுநாளில் மம்தாவுடனான தனது நருக்கம் பற்றி கங்குலி பசியது அரசியல் அரங்கில் சலசலப்ப ஏற்படுத்தியது.

சமநிலயில் நடந்துகாள்கிறார்

இதுபற்றி அரசியல்நோக்கர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், கங்குலி அபார புத்திசாலி. அவர் அரசியலில் இறங்க எந்த அளவுக்கு தயாராக இருக்கிறார் என்பதை அறிய அவரது வீட்டுக்கு அமித்ஷா வந்திருப்பார் என்று கருதுகிறேன். இப்பாது அவர் முதல்-மந்திரியுடனான நெருக்கம் பற்றி பசி இருக்கிறார். நான் இதில் எதையும் பார்க்கவில்லை. அவர் மாநிலத்திலும், தேசிய அளவிலும் செயல்பட வேண்டியதிருப்பதால் சமநிலையில் நடந்து கொள்கிறார் என நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com